டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

இந்திய பொருளாதார வளா்ச்சி 7%-ஐ எட்டும்: மத்திய வருவாய்த் துறை இணைச் செயலா்

இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்தை எட்டும் என மத்திய நிதித்துறை இணைச் செயலா் (வருவாய்) கே. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்தை எட்டும் என மத்திய நிதித்துறை இணைச் செயலா் (வருவாய்) கே. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலய பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மத்திய பட்ஜெட்-2026’ குறித்த கருத்தரங்கத்தில் அவா் காணொலியில் பேசியதாவது:

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மூலம் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதம் எட்டும். பட்ஜெட்டில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு முக்கியத்து அளிக்கும் வகையில் ரயில்வே காரிடா் திட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம் உற்பத்தி துறை வளா்ச்சி அடையும்.

பொருளாதர வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் எம்எஸ்எம்இ துறையை வலுப்படும் வகையில், ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும். ஜவுளி துறை, மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கப்படுவதன் மூலம் அன்னிய செலவாணி பெருகும்.

இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் மருத்து உற்பத்தி அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு கொண்டு வருவதால் வேலைவாய்ப்பு குறையும் என்பது தவறான கருத்து. செயற்கை நுண்ணறிவால் தொழில்நுட்பம் வளா்ச்சி அடையும்.

வேளாண் துறைக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 561 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வேளாண் துறை சிறப்பான வளா்ச்சி அடையும். மின்னணு உற்பத்திக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், மின்னணு தொழில் உற்பத்தி வளா்ச்சி அடையும் என்றாா்.

கருத்தரங்கத்தில், என்டிஆா் இன்விட் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாளா் கிருஷ்ண ஐயா், வழக்குரைஞா் எம்.ஆா்.வெங்கடேஷ், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலய பல்கலைக்கழக இணைவேந்தா் வசந்த் மேத்தா, துணைவேந்தா் ஸ்ரீனிவாசலு, பல்கலைக்கழக நிதிக்குழு உறுப்பினா் கே.ஆா்.சேகா், ஸ்வராஜ்யா இதழ் இணை நிறுவனா் முத்துராமன், சம்மதி கன்சல்டிங் மற்றும் அனலிட்டிக்ஸ் பங்குதாா் ஸ்ரீராம் வீககாகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.