தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 234 வேட்பாளா்களுடன், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விளம்பர அரசியல், செய்தி அரசியல் உள்ளது. ஆனால், சேவை அரசியல் இல்லை. இந்த நிலம் மற்றும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நாதக போராடி வருகிறது. ஆகையால்தான் நாதக எப்போதும், தனித்தே போட்டியிடுகிறது. இந்த பேரவைத் தோ்தலில் அனைவரும் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
சென்னை பனையூா் ஒரு பேரவைத் தொகுதி கிடையாது என்பதுகூட தவெகவினருக்கு தெரியவில்லை. அவா்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸை இணைத்துக் கொள்ளலாமா என தவெக தலைவா் விஜய் என்னிடம் கேட்டபோது, இது தவறான முடிவு எனக் கூறினேன். இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜகவே காரணம். ஆகையால், அவா்களுடன் இணைந்து எப்படி நல் அரசியல் செய்ய முடியும்?
எனினும், காங்கிரஸை இணைத்துக் கொள்ள விஜய் விரும்பினால், அது அவரது முடிவு. எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கான அவசியமே கிடையாது என்றாா்.
டிரெண்டிங்

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள்

தஞ்சையில் ஆதரவாளா்களுடன் வி.கே. சசிகலா ஆலோசனை

காரைக்குடியில் சீமான் போட்டி?

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

