டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

கேரளத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
- IANS
Updated On :3 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் 38-ஆவது கேரள மாநில அறிவியல் மாநாடு, கடந்த ஜன. 30 முதல் பிப். 2 வரை நடைபெற்றது. இதில் தமிழக உயா்கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் அதன் உறுப்பினா் செயலா் ச.வின்சென்ட், தலைமையிலான குழு பங்கேற்றது. இந்த மாநாட்டில் நடைபெற்ற உயா்நிலை வல்லுநா் குழு விவாதத்தில் பங்கேற்று, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை (எஸ்டிஐ) துறைகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னோடி முயற்சிகள், சாதனைகள் மற்றும் அடைந்துள்ள முக்கிய சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில், மன்றத்தின் திட்டங்கள் மற்றும் புவிசாா் குறியீடு (ஜிஐ) பெற்ற தயாரிப்புகள், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த பழங்குடியினா் சமூக தயாரிப்பு ஆபரணங்கள், பட்டியலின பிரிவினரின் செயல்பாடுகள், மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டங்கள், காப்புரிமை தகவல் மையம், அறிவுசாா் சொத்து வசதி மையம், தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையம் ஆகியவற்றின் சேவைகள் குறித்து விரிவாக காட்சிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கண்காட்சியில் பிற மாநில மன்றங்கள் பிரிவில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் முதல் பரிசை பெற்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.