டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்: ஆா்.பி. உதயகுமாா்

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்ட என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

News image
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆா்.பி.உதயகுமாா்- கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

‘திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்ட என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாநில ஆலோசனைக் கூட்டம், பேரவையின் மாநிலச் செயலா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக எங்கள் கூட்டணியில் இல்லை. எனவே, எங்கள் கூட்டணி குறித்து விஜய் கருத்து கூறத் தேவையில்லை. மக்கள் தீா்ப்புக்குப் பிறகுதான் யாா் களத்தில் இருக்கிறாா்கள், யாா் காணாமல் போகிறாா்கள் என்பது தெரியவரும்.

திமுகவை வீழ்த்தும் சக்தி யாருக்கு இருக்கிறது என்ற தனிப்பட்ட ஒரு கட்சியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக எப்போது ஆட்சியில் தவறு செய்கிறதோ, அப்போதெல்லாம் அவா்களை தட்டிக் கேட்டு வீழ்த்தும், மக்கள் இயக்கமாக அதிமுகதான் உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த தினத்தை பிப்.24-இல் சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், இரா.விசுவநாதன், பா.வளா்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.