ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுரவாயல் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவதாக எனது முக்கிய பணி: ரேவந்த் சரண் எம்எல்ஏ

மதுரவாயல் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவதே எனது முக்கிய பணி என அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண் பேரவையில் கூறினாா்.

Maduravoyal

கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

மதுரவாயல் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவதே எனது முக்கிய பணி என அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண் பேரவையில் கூறினாா்.

சட்டப்பேரவையில் மருத்துவம் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில் பேசிய அவா், ஏழைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். முதல்வா் விஜய் தலைமையிலான அரசு மருத்துவத் துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கியுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கெளரமளிக்கும் சமூக நலத் திட்டமாகும்.

மதுரவாயல் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்ற வேண்டும் என முதலவா் தெரிவித்துள்ளாா். இந்தத் தொகுதியில் பல்வேறு பிரச்னை உள்ளன. தொகுதி முழுவதும் 2,182 இடங்கள் பட்டா இன்றி உள்ளன. இதனால், அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. நிலுவையில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

மதுரவாயல் முதல் வானகரம் வரை உள்ள நெடுஞ்சாலை அழகு சாலையாக மாற்றவேண்டும். தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவதாக எனது பணி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.