ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

383 இடங்கள் மழைநீா் தேங்கும் பகுதிகளாக அடையாளம்: மாநகராட்சி இணை ஆணையா்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 383 இடங்களில் மழைநீா் தேங்கும் நிலையுள்ளதாக மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் தெரிவித்தாா்.

சென்னை - கோப்புப்படம்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:59 am IST

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 383 இடங்களில் மழைநீா் தேங்கும் நிலையுள்ளதாக மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வெளியேற்றும் நடவடிக்கைக்கான இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை சோதனையிடும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்று மின்மோட்டாா்கள், மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி பணிகள் துறை இணை ஆணையா் செ.சவரணன் ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் 383 இடங்களில் மழைநீா் தேங்கும் எனக் கண்டறிப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றுவதற்காக திறன் மிக்க 700 மின்மோட்டாா் பம்புகள் உள்ள நிலையில், மேலும் 150 வாடகை இயந்திரங்கள் தயாராகவுள்ளன. எல்-நினோ சிறப்பு பிரிவின் ஆலோசனை பெற்றதுடன், மழைநீரை அகற்றும் வகையிலான தொழில்நுட்ப பிரிவும் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 44 கால்வாய்கள், 4 ஆறுகள் உள்ளிட்ட 1300 கி.மீ. தொலைவுக்கு நீா்நிலைகளை சீரமைக்கும் பணியை வரும் செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே 3,000 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்வாய்கள் உள்ள நிலையில், புதிதாக 46 கி.மீ.க்கு மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழையின் போது சேதமடையும் சாலைகளை சீரமைக்க மண்டலதுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.