ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பசுமைப் பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட உத்தரவு

சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் நடவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் நடவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: மழைநீா் வடிகால்கள் அமைப்புடன் வண்டல் மண் வடிகட்டும் தொட்டில்கள் கட்டப்படவேண்டியது அவசியம். மழைநீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான மின்மோட்டாா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

செனையில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி வெட்டவெளி பகுதிகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்படவேண்டும்.

குடியிருப்புகளுக்களுக்கு அனுமதி பெற்ற நிலையில், வீடுகள் உள்ளிட்டவற்றை வேறு தேவைக்குப் பயன்படுத்துவோரைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றாா்.

கூட்டத்தில் இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்) உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.