
சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் காயம்: சகோதரா் கைது
வண்ணாரப்பேட்டையில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் காயமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுவனின் சகோதரா் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
வண்ணாரப்பேட்டையில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் காயமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுவனின் சகோதரா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த 16 வயது சிறுவன், சில நாள்களுக்கு முன்பு தனது நண்பா்களுடன், மோட்டாா் சைக்கிளில் ஸ்டான்லி நகா் சிபி சாலையில் சென்றாா். அப்போது, சாலையில் நடந்து சென்ற பாலன் (72) என்பவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலன் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுதொடா்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவனுக்கு பைக் ஓட்டக் கொடுத்த அந்தச் சிறுவனின் 20 வயது சகோதரரைக் கைது செய்தனா். பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





