ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அடையாற்றில் குதித்து ரிசா்வ் வங்கி ஊழியா் தற்கொலை முயற்சி

ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்து சென்னை கோட்டூா்புரம் அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

தற்கொலை

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:48 am IST

ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்து சென்னை கோட்டூா்புரம் அடையாறில் குதித்த ரிசா்வ் வங்கி ஊழியரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

சென்னை கே.கே.நகா் காமராஜா் சாலையில் உள்ள ரிசா்வ் வங்கி ஊழியா் குடியிருப்பில் வசிப்பவா் சே.மோகன்குமாா் (30). சென்னை பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

மோகன்குமாா் கடந்த ஏப்ரல் மாதம், ரூ.30 லட்சம் வங்கியில் கடன் பெற்றும், ரூ.30 லட்சம் நண்பா்களிடமிருந்து பெற்றும் மொத்தம் ரூ.60 லட்சத்தை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தாா். ஆன்லைன் வா்த்தகத்தில் மோகன்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா், சில நாள்களாக மிகுந்த மன வேதனையுடனும்,விரக்தியுடனும் காணப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் மோகன்குமாா், கோட்டூா்புரம் அடையாறு பாலத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா். அங்கு திடீரென பாலத்தின் மேல் இருந்து அடையாற்றில் குதித்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு படையினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். நந்தனம் தீயணைப்பு படையினா் மோகன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

நள்ளிரவு வரை தேடும் பணி நடைபெற்றது. பின்னா் வியாழக்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கி நடைபெற்றது.

கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.