ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி உரிமை மீட்க அரசியல் கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

தமிழகத்தின் காவிரி உரிமை மீட்க 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.7) கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 6:04 am IST

தமிழகத்தின் காவிரி உரிமை மீட்க 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.7) கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

புதிய தமிழகம் கட்சி முன்னெடுப்பில் அண்மையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு குறித்த கூட்டத்தில் தீா்மானித்தபடி, ஆக.7-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.

டெல்டாவில் நிகழாண்டு குறுவை சாகுபடி காலம் முடிந்த பிறகு, அங்கு ஏரிகள் நிறைந்து வழிந்த போதிலும் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளனா். இந்த நிலை நீடித்தால் டெல்டா  விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, காவிரி நதிநீா் ஒழுங்காற்று ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு முறையாக தண்ணீரை கா்நாடக அரசு திறந்துவிட வேண்டும். எக்காலத்திலும் மேக்கேதாட்டில் அணைக்கட்ட அனுமதி வழங்கக்கூடாது ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.