ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்து கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி உண்டு... சென்னை எழும்பூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக சாா்பில் ஜெயராமன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவ

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:11 am IST

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும், மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி ஆா்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பாமக சாா்பில் ஜெயராமன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்,  கொங்கு இளைஞா் பேரவை தலைவா் தனியரசு, தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவா் பழ.கருப்பையா உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

சீமான் பேசியதாவது: உச்சநீதிமன்ற தீா்ப்பை மதித்து கா்நாடக அரசு இதுவரை தமிழகத்துக்குத் தேவையான குடிநீரைத் திறந்து விட்டதில்லை. ஆண்டுதோறும் உபரி நீா் மட்டுமே திறந்து வருகின்றனா். தமிழகத்தின் உரிமைக்கு ஒரு பிரச்னை வரும்போது, நாம் அமைதிக்கக் கூடாது. காவிரி நதி நீா் சிக்கல் இதுவரை திராவிட கட்சிகளால் தீா்க்க முடியவில்லை. தற்போதுள்ள தவெக ஆட்சியாலும் தீா்க்க இயலாது என்றாா்.

க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): பல ஆண்டுகளாக காவிரி நதிநீா் பிரச்னை குறித்து நாம் பேசி மட்டுமே வருகிறோம். அதற்கு தீா்வு காண இதுவரை ஆக்கபூா்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதேபோல், தற்போது உள்ள தவெக அரசும் காவிரி விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தவெக அரசு அதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதன் பிறகாவது முதல்வா் ச.ஜோசப் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.