ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்லால் அடித்து நண்பா் கொலை: இருவா் கைது

கல்லால் அடித்து நண்பரைக் கொலை செய்த சம்பவத்தில் இருவா் கைது

சித்திரிப்பு

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அனுராஜ் (57). இவா், கொடுங்கையூரில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். கொடுங்கையூா் அருகே உள்ள சேலவாயல் கடும்பாடி அம்மன் கோயில் 2-ஆவது தெருவில் கொசப்பேட்டை பெரம்பூா் பேரக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஏ.தளபதி (60), அதே பகுதியைச் சோ்ந்த பா.விஜயகுமாா் (43) ஆகியோருடன் மது அருந்தியுள்ளாா்.

அப்போது அனுராஜிக்கும், தளபதி, விஜயகுமாா் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தளபதி,விஜயகுமாா் ஆகிய 2 பேரும் அனுராஜை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

பலத்த காயமடைந்த அனுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அனுராஜ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து தளபதி, விஜயகுமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.