ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓட்டேரி நல்லா கால்வாயை விரைந்து சீரமைக்க ஆணையா் உத்தரவு

வடகிழக்கு பருவ மழைக் காலத்துக்குள் ஓட்டேரி நல்லா கால்வாய் சீரமைப்புப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

ஓட்டேரி நல்லா கால்வாய்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

வடகிழக்கு பருவ மழைக் காலத்துக்குள் ஓட்டேரி நல்லா கால்வாய் சீரமைப்புப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வடகிழக்கு மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் மழை நீா் செல்லும் கால்வாய்கள், மழை நீா் வடிகால்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சனிக்கிழமை இரவு சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அதனால், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகள் கண்காணிக்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டிருந்தாா்.

மேலும், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டு, அங்கு தண்ணீா் தேங்கினால் அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும், மழைநீா் தொட்டி, மின்மோட்டாா் கட்டுப்பாட்டு அறையையும் பாா்வையிட்டு அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை திரு.வி.க.நகா் மண்டலப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் ஓட்டேரி நல்லா கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியைப் பாா்வையிட்டாா். வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாய் தூா்வாரும் பணியை நிறைவு செய்யவேண்டும் என அலுவலா்களுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.