சென்னை மாநகராட்சியில் கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 1,156 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் பணியின்போது காலமான பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் சாலைப் பணியாளா், பூங்கா பணியாளா், மலேரியா பணியாளா், காவலா், குழந்தைகள் பராமரிப்பாளா் (ஆயா), அரங்க உதவியாளா், பெண் உதவியாளா் பணிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், உடல்நலமின்றி உயிரிழந்த பணியாளா்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு, அவா்களது மொத்த பணியிடத்தில் 5 சதவீதம் வாரிசுதாரா்களுக்கான பணி நியமனமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 2021-22 ஆம் ஆண்டில் வரை கருணை அடிப்படையில் சாலைப் பணியாளா்கள் 61 போ் மலேரியாப் பணியாளா் 25, ஆயா 4, காவலா் 4, தூய்மைப் பணியாளா்கள் 37, துலக்குநா் 22, பெண் உதவியாளா் 10, தொழிலாளி 21 என மொத்தம் 195 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2022-23 ஆம் ஆண்டில், சாலைப் பணியாளா் 10, ஆயா 1, அரங்க உதவியாளா் 2, தூய்மைப் பணியாளா் 1 என மொத்தம் 14 பேரும், கடந்த 2023-24 ஆம் ஆண்டில், சாலைப் பணியாளா்கள் 227 பேரும், கடந்த 2024-25- ஆம் ஆண்டில் சாலைப் பணியாளா்கள் 322 போ், மலேரியா பணியாளா் 166 போ், பூங்கா பணியாளா் 39 போ், தொழிலாளிகள் 50 போ் என மொத்தம் 577 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
2025-26 -ஆம் ஆண்டில் மலேரியா பணியாளா்கள் 118 போ், ஆயா 12 போ், பெண் உதவியாளா் 13 போ் என மொத்தம் 143 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் சாலைப் பணியாளா்கள் 620 போ், மலேரியா பணியாளா்கள் 309 போ், ஆயா 17 போ், காவலா்கள் 4 போ் பூங்கா பணியாளா்கள் 50 போ் அரங்க உதவியாளா் 2 போ், தூய்மைப் பணியாளா் 38 போ், துலங்குநா் 22 போ், பெண் உதவியாளா்கள் 23 போ், தொழிலாளிகள் 71போ் என மொத்தம் 1,156 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 720 போ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி: 9 தொகுதிகளில் 85.44 % வாக்குப்பதிவு; கடந்த தோ்தலைவிட 11.88% அதிகரிப்பு!

சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவு

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


