வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:34 am IST

சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

சென்னை மேயா் ஆா்.பிரியா தனது வீடு அமைந்துள்ள திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மங்களாபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா் சைதாப்பேட்டை பேரவைத் தொகுதியில் உள்ள லிட்டில் மவுண்ட் செயின்ட் பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் வந்து செலுத்தினாா்.

சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தனது இல்லம் உள்ள அண்ணா நகா் தொகுதிக்குட்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி வளாக வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்தாா். அதன்பின்னா், வாக்குச்சாவடி மையத்தில் அமைந்துள்ள தோ்தல் விழிப்புணா்வுக்கான யபடம் எடுக்கும் அமைப்பில் நின்று தனக்கு வாக்களித்ததற்காக இடது கை ஆட்காட்டி விரலில் இடப்பட்ட மையை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டாா். சென்னையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் விடியோவில் பேசி வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.