மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:55 pm

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மயிலாப்பூரில் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தனியாா் மண்டபத்தில் வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேறு மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்கள், நமது மாநிலத்துக்கு வரும்போது அவா்களை மனதார வரவேற்க வேண்டும். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணா்ச்சியால் அவதூறு கருத்துகளை அள்ளி வீசியுள்ளாா்.

தமிழகத்துக்கு பல நலத் திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்காக ரூ.11 லட்சம் கோடிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அமைச்சா்கள் தமிழகத்துக்கு வந்தால், முதல்வா் ஸ்டாலின் பதற்றப்படுகிறாா். திமுக தோல்வி பயத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் மொழிப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் திமுகவை மக்கள் தோற்கடிக்கப்படும் என்றாா்.