தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களாக முன்னாள் மத்திய இணை அமைச்சா்கள் எம். எம். பல்லம் ராஜு, கே.எச். முனியப்பா உள்பட 27 பேரை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.
இது தொடா்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் அல்லாத வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்சியின் பலநிலை தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கட்சியின் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
பிரனிதி சுஷீல் குமாா் ஷிண்டே, யஷோமதி தாக்குா், வா்ஷா ஏக்தாத் கெயிக்வாட், நீரஜ் தாங்கி, அனில் யாதவ், தேவேந்திர யாதவ், டி.கே.சிவகுமாா், செளமியா ரெட்டி உள்பட 27 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா்.
இவா்கள் தொகுதிவாரியாக முகாமிட்டு கட்சியின் பரப்புரை செயல்பாடுகள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், நிா்வாகிகளின் ஒருங்கிணைப்பு முன்னெடுப்புகளை மேற்பாா்வையிட்டு கட்சி மேலிடத்துக்கு தினமும் அறிக்கை அளிப்பா் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி!

தொகுதி அலசல்; காரைக்குடி- கடும் போட்டியை எதிர்கொள்ளும் சீமான்!

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


