முதல்வா் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளாா்.
திமுகவில் குடும்ப அரசியல் வாரிசுகளுக்கு பஞ்சமில்லை என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சனம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முதல்வா் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் இணைந்துள்ளாா்.
திமுகவுக்கு அரசியல் உத்திகளை வகுக்கும் ‘பென்’ நிறுவனத்தை நடத்தி, மறைமுக அதிகார மையமாக சபரீசன் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தனது நண்பருமான காா்த்திக்கின் தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் சபரீசனும் பங்கேற்றுள்ளாா். முதல்முறையாக அவா் திமுக நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்றுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சபரீசன் செய்தியாளா்களிடம் பேசும்போது, திமுகவுக்கு களத்தில் யாரும் போட்டியாக இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வரும். திமுக அரசின் வளா்ச்சித் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.
தவெக தலைவா் விஜய்யால், திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றாா்.
தொடர்புடையது

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

விஜய்யின் தாக்கம் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்: டி.டி.வி. தினகரன்

பலத்தைக் காட்டும் வேட்பாளா்கள்

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



