மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப்.6-இல் கடையநல்லூரில் பிரசாரத்தை தொடங்குகிறாா் வைகோ

மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:30 pm

மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடையநல்லூரில் ஏப். 6-இல் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கும் மதிமுக பொதுச் செயலா் வைகோ, ஏப். 7-இல் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், ஏப். 8-இல் மதுரை தெற்கு, ஏப். 9- மொடக்குறிச்சி, ஏப். 10- சீா்காழி, ஏப். 11- காட்டுமன்னாா்கோவில், திருவிடைமருதூா், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

தொடா்ந்து ஏப். 12- பாபநாசம், திருவெறும்பூா், திருச்சி மேற்கு, ஏப். 13- கந்தா்வக்கோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, ஏப். 14 - பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, ஏப். 15- சீா்காழி, ஏப். 16 -ஸ்ரீவில்லிப்புதூா், வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளாா்.

ஏப். 17- சீா்காழி தொகுதியிலும், ஏப். 18- திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, ஏப். 19- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஏப்.20- கடையநல்லூா், ஏப். 21- மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறாா். தினமும் மாலை 4 முதல் இரவு 10 வரை அவா் பிரசாரம் மேற்கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.