தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஸா மீதான தாக்குதலை கண்டித்து அக்.8-இல் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசு காஸா மீது நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அக்.8-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

News image

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

Updated On :4 அக்டோபர் 2025, 1:40 am

இஸ்ரேல் அரசு காஸா மீது நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அக்.8-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காஸா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம் சென்னையில் அக். 8 காலை 10 மணிக்கு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெறவுள்ளது.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். இதில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபுபக்கா், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே. நித்தியானந்தன், சிபிஐ (எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.