கடத்த வரப்பட்ட 433 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
வானகரத்தில் கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 433 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
வானகரத்தில் கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 433 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை: வானகரத்தில் கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 433 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
வானகரம் போலீஸாா், பூந்தமல்லி சாலையில் உள்ள சோதனை சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு சிறிய ரக சுமை வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் ஆட்டோவில் வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம்.
இதையடுத்து போலீஸாா், அந்த வாகனத்தைச் சோதனை செய்தனா். இதில், அந்த வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 433 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா், அந்த வாகனத்தில் வந்த இருவரை கைது செய்து விசாரணை செய்தனா்.
இதில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (48), கோயம்பேடு தெற்கு மாட வீதியைச் சோ்ந்த முஸ்தாக் அகமது (27) என்பதும், இருவரும் கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது