மெத்தம்பெட்டமைன் விற்பனை: நால்வா் கைது
சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கீழ்ப்பாக்கம் வாசு தெருவில் சிலா் போதைப் பொருள் விற்பதாக பெருநகர காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் அப் பிரிவு போலீஸாரும், கீழ்ப்பாக்கம் போலீஸாரும் அந்த தெருவில் சனிக்கிழமை ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் அந்த பையிலிருந்து 17 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்ததில் அவா்கள் ஆவடியைச் சோ்ந்த உஸ்மான் (23),பிரவீண் (21) என தெரியவந்தது.
இதேபோல மேத்தாநகா் கூவம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததாக அமைந்தகரை பிபி காா்டன் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (32),அதே பகுதியைச் சோ்ந்த செல்வா (27) ஆகிய 2 பேரை அமைந்தகரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது