ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து
செங்குன்றம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
செங்குன்றம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
By தினமணி செய்திச் சேவை
Sasikumar
செங்குன்றம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து 36 பயணிகளுடன், திருவண்ணாமலைக்கு ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்ற ஆம்னி பேருந்து செங்குன்றம் அருகே கோனிமேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் லோகேஷ் பலத்த காயமடைந்தார்.
பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தை 2 கிரேன்கள் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.
இதன் காரணமாக மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது