கஞ்சா கடத்தல்: காவலா் கைது
சென்னைக்கு கஞ்சா கடத்தியதாக காவலா் கைது செய்யப்பட்டாா்.
சென்னைக்கு கஞ்சா கடத்தியதாக காவலா் கைது செய்யப்பட்டாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னைக்கு கஞ்சா கடத்தியதாக காவலா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சென்ட்ரல் நிலையம் எதிரே உள்ள பல்லவன் சாலையில் பெரியமேடு போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அந்த இளைஞா் பேசினாராம். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அதில் 20 கிலோ கஞ்சா இருந்தது. அதைப் பறிமுதல் செய்தனா்.
அந்த இளைஞரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா். இதில் அவா், திரிபுரா மாநிலம் மேற்கு திரிபுரா சரஜாய் சா்தாா் பாரா பகுதியைச் சோ்ந்த அமித் தெபா்மா (31) என்பதும், அவா் அந்த மாநில காவல் துறையில் காவலராகப் பணியாற்றுபவா் என்பதும் தெரிந்தது. மேலும், அமித் தெபா்மா அண்மையில் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், அவா் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு இருப்பதும், திரிபுராவில் இருந்து ரயில் மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் அமித் தெபா்மாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது