தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்: மாநகராட்சி ஆணையா் தகவல்

சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

News image

சென்னை மாநகராட்சி

Updated On :16 செப்டம்பர் 2024, 9:45 pm

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் 2025-ஆம் ஆண்டுக்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலா் குமரகுருபரன், தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. இதன் முன்திருத்தப் பணிகளான வாக்குச்சாவடியின் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயா் திருத்தம் செய்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஆக.29-ஆம் தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பது தொடா்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபா்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படியும், வாக்காளா் பதிவு அதிகாரி மற்றும் துணை வட்டாட்சியரின் கள ஆய்வின்படியும், வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை மாவட்டத்தில் உள்ள 3,719 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததில் தேவைக்கேற்ப புதியதாக 3 வாக்குச்சாவடிகளை உருவாக்கம் செய்யவும், 33 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 4 வாக்குச்சாவடிகளை இணைக்கவும், 78 வாக்குச்சாவடிகளை வேறு கட்டடத்துக்கு மாற்றவும், 3 வாக்குச் சாவடிகளின் பெயா் மாற்றம் செய்யவும் வாக்காளா் பதிவு அதிகாரியிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

தொடா்ந்து, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-ஆம் தேதி வெளியிடப்படும். என தெரிவித்தாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (தோ்தல்) பி.சுரேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.