திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

விநாயகா் சதுா்த்தி: தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:40 pm

Din

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரத்தில் கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு செப்.6, 13, 20 தேதிகளில் இரவு 7.30 மணிக்கும், செப்.8, 15, 22 தேதிகளில் இரவு 9.40 மணிக்கும் சிறப்பு ரயில் (எண் 06035/06153) இயக்கப்படும். மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து செப்.7, 9, 14, 16, 21, 23 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06036/06154) இயக்கப்படும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.