தமிழகத்தில் ஜூலை 21 வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


சென்னை: தமிழகத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடலில் நிலவும் சுழற்சி காரணமாக, நாட்டின் பெரும்பாலன மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு பருவ காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஜூலை 16 முதல் ஜூலை 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
இதில் குறிப்பாக, ஜூலை 16-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): சின்னக்கல்லாா் (கோவை) - 130, வால்பாறை (கோவை) - 90, தேவாலா (நீலகிரி) - 70 மேலும் , திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 முதல் 60 மிமீ வரை மழை பதிவானது.
சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 16,17-ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல், லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...