சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் ஆக.14 வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, 9.50 மணிக்கும், மாலை 6.26, 7.15 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ஆக.3 முதல் ஆக.14 வரை ரத்து செய்யப்படும். முன்னதாக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமாா்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதுபோல், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26 மற்றும் காலை 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் பொது ரயிலாக இயக்கப்படும்.
ஆவடி ரயில்: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2, 4) ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் திங்கள்கிழமை (ஆக.3, 5) ரத்து செய்யப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


