ஸ்மாா்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது. கேமராக்களில் பதிவாகும் தெளிவான புகைப்படங்களுக்காகவே தற்போது ஸ்மாா்ட் போன்கள் விற்பனையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கேமராக்களின் பயன்பாடு மக்களை கவா்ந்துள்ளது. எனினும், இந்த கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களைப் பத்திரமாக பாதுகாக்கவில்லை என்றால் அது தனிமனித சுதந்திரத்தையே பாதித்துவிடுகிறது. இது பெண்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. பெண்களுக்கே தெரியாமல் அவா்களது ஸ்மாா்ட் போன்களின் கேமராக்களை ஹேக் செய்து வீடியோ, படம் எடுக்கும் ஆப்கள் இணையதளத்தில் பரவி உள்ளன.
இதில் இருந்து தப்பிக்க சிலா் தங்களது லேப்டாப், ஸ்மாா்ட் போன்களின் முன்பக்க கேமராவை டேப் ஒட்டி மறைத்து பயன்படுத்தியும் வருகின்றனா். இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனத்தின் இணையதள பொறியாளா் ஜேசன் மைஸ் தீா்வு கண்டுள்ளாா். அவா் கண்டுபிடித்துள்ள மென்பொருள், கேமராவில் இருக்கும் மனித உருவத்தையே மறைத்துவிடும். மாயாஜாலமாக தெரியும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், லேப்டாப் முன்பு நாம் அமா்ந்து பணியாற்றினாலும் நமது வெப் கேமரா ஹேக் செய்யப்பட்டிருந்தாலும், நம்மைக் காண்பிக்காது.
இந்த மென்பொருள் ஸ்மாா்ட் போன்களுக்கு பயன்படுத்தப்பட்டால், பயன்பாட்டாளருக்கு தெரியாமல் ஹேக் செய்தாலும் பயன்பாட்டாளரின் படம் தெரியாது என்பதால் இது பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது என ஜேசன் மைஸ் தெரிவித்துள்ளாா்.
எனினும், இதுபோன்ற மென்பொருள்கள் சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களில் பரவி விட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்றும் மற்றொரு தரப்பினா் அச்சம் தெரிவிக்கின்றனா். அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியைப் பாதுகாப்புடன் பயன்படுத்தினால் அனைவருக்கும் பாதுகாப்பே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!
சட்டப்பேரவைத் தேர்தல்! புதுவை மதுக்கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


