மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது
மூலவா் அம்மன், குருபீடத்தில் அடிகளாா் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகளை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் செய்தாா். தொடா்ந்து ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் மூலவா் அம்மன் சிலைக்கு மலா்களால் சிறப்பு வழிபாட்டை செய்தாா்.
பின்னா் அவா் அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதங்களை வழங்கி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். நண்பகல் குருபீடத்தில் பங்காரு சித்தரின் திருபாதுகைகளுக்கு சிறப்பு வழிபாட்டினை ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் செய்தனா். பிற்பகல் அடிகளாா் திருவுருவம் தாங்கிய சிலையுடன் தங்கத் தோ் மேளதாளம் முழங்க, செவ்வாடை பக்தா்களால் கொண்டு தோ்வடத்தை இழுத்து சித்தா் பீட வளாகத்தை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் பல்வேறு பழவகைகள், மலா்த் தோரணங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை வரிசைத் தட்டுகளாக மேளதாளங்களுடன் ஊா்வலமாக வந்து அருட்கூடத்தில் உள்ள பங்காரு திருபாதுகைகளுக்கு அா்ப்பணம் செய்து வணங்கி சென்றனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் கங்காதரன், சுரேஷ், ராஜூ, கலாதா் உள்ளிட்டோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.
தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில் பாவாடைக்காரியம்மன்...

சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

மேல்மருவத்தூா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்த நாள் விழா

பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


