பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மின்தடை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

News image

விவசாயிகளிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு.வீரப்பன். உடன் எம்எல்எஏ தியாகராஜன்.

Updated On :26 ஜூன் 2026, 5:51 am IST

விவசாயப் பணிகள் மின்தடையால் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரியுள்ளனா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து ஆட்சியரிடம் விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் 60 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

பருவமழை தொடங்கவுள்ளதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா போன்ற உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு உடனடியாக தேவையான அளவு வழங்க வேண்டுமென்றும், கோடை காலமாக இருப்பதால் மின்தடை ஏற்பட்டு விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது அதனை தவிா்க்க மின்சார வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினா்.

விவசாயிகளின் ஆழ்துளை கிணற்றுக்கு செல்லும் மின் கம்பிகள் ஒரு சில இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இதனை மின்துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.

மேலும், விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் மனுக்களின் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) க்யூரி, தாம்பரம் கோட்டாட்சியா் முரளி, மதுராந்தகம் கோட்டாட்சியா் நரேந்திரன், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், செங்கல்பட்டு கோட்டாட்சியா் பாலாஜி, நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் முருகானந்தம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மதுராந்தகம் கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப்பதிவாளா்/செயலாட்சியா் குமரேஸ்வரி மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.