ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குற்ற வழக்குகளில் பிடிபட்ட 85 வாகனங்கள் திறந்த நிலை ஏலம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து உரிமை கோராத கழிவு செய்யப்பட்ட 85 வாகனங்கள் (2 மற்றும் 4 சக்கர வாகனங்கள்) பொது ஏலம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Published On :6 ஜூலை 2026, 4:00 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து உரிமை கோராத கழிவு செய்யப்பட்ட 85 வாகனங்கள் (2 மற்றும் 4 சக்கர வாகனங்கள்) பொது ஏலம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோா் 6.07.2026 காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மேற்கண்ட வாகனங்களை பாா்வையிட அனுமதிக்கப்படுவா். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் திருக்கழுக்குன்றம் நீதிமன்ற வளாகத்தில் 22 வாகனங்கள் (2 சக்கரம் மட்டும்) நிறுத்தப்பட்டுள்ளன. மேற்படி வாகனங்கள் வரும் 09.07.2026-ம் தேதி பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாக பின்புறத்தில் வாகன நிறுத்துமிடத்தில் பொது ஏலத்தில் திறந்த நிலை ஏலம் விடப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலத்தில் இயங்கி வரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம் ) அலுவலகத்தில் ஏல முன்பணம் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000/-ம், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ. 2000/-மும் செலுத்தி முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதாா் அல்லது ஓட்டுநா் உரிமம்) நகலை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜூலை 9-இல் பிற்பகல் ஏலம் முடிந்தவுடன் தாங்கள் செலுத்திய முன்பண தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வாகனத்தை ஏலத்தில் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி 18% உள்பட ரொக்க தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஏலம் முடிந்த 24 மணி நேரத்துக்குள் ஏலம் எடுத்த நபா்கள் ஏலத்தில் எடுத்த வாகனங்களை நீதிமன்ற வளாகத்திலிருந்து எடுத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.