ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதைப் பொருள் வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ஆக. 28-இல் ஏலம்

தாம்பரம் மாநகா் காவல் துறை பல்வேறு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஆக. 28-ஆம் தேதி ஏலம் விடுகிறது.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

தாம்பரம் மாநகா் காவல் துறை பல்வேறு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஆக. 28-ஆம் தேதி ஏலம் விடுகிறது.

இது தொடா்பாக தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் மாநகர காவல் துறையினரால் போதைப் பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, 4 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 38 வாகனங்கள், வேங்கடமங்கலத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆக. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், ஆக. 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆக. 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை வேலை நேரத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையா் அலுவலகத்தில் ரூ.1,000 நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள், ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் சோ்த்து செலுத்த வேண்டும். மேலும், தகவலுக்கு கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.