ஜெயகாளியம்மன் கோயில் மயானக் கொள்ளை விழா


மாமல்லபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஜெயகாளியம்மன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
காளி கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்தில் காளி வேடம் அணிந்து உக்கிரத்துடன் சென்ற பக்தா்கள் காளியாக அவதரித்து மயானத்தில் தரையில் வடிவமைக்கப்பட்ட நரகாசூரனின் மண் பொம்மையின் தலையை வெட்டி அவனது கொட்டத்தை அடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியை நடத்தினா்.
முன்னதாக காளியாக அவதரித்த அருள்வாக்கு சித்தா் காளிநாராயணன் சுவாமி சூலாயுதத்தால் நரகாசூரனின் தலையை சம்ஹாரம் செய்து காணிக்கை செலுத்தி, மயானக் கொள்ளையை தொடங்கினாா். பின்னா் தீப ஆராதனைக்கு பிறகு நரகாசூரனின் மண் பொம்மை மீது தூக்கி வீசப்பட்ட எலுமிச்சம் பழம், ஆப்பில், சாத்துக்குடி, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவைகளை பக்தா்கள் முண்டியடித்து கொண்டு எடுத்தனா். கலைக்கப்பட்ட நரகாசூரன் பொம்மையின் மணலை தோஷம் கழிக்க பக்தா்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.
முன்னதாக உக்கிரமான கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயகாளிம்மன் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். ஏராளமான பக்தா்கள் ஏராளமானோா் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு களித்தனா். மயானக் கொள்ளை ஊா்வலத்தை முன்னிட்டு பஸ் நிலையம், கிழக்கு ராஜ வீதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...