மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு

மதுராந்தகம், செய்யூா் தொகுதி திமுக, விசிக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்த்தில் அம்மனை வழிபட்டனா்.

News image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வழிபட்ட திமுக கூட்டணி வேட்பாளா்கள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 10:01 pm

மதுராந்தகம், செய்யூா் தொகுதி திமுக, விசிக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்த்தில் அம்மனை வழிபட்டனா்.

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அமுலு பொன்மலா், செய்யூா் (தனி) தொகு விசிக வேட்பாளா் ம.சிந்தனைச் செல்வன் ஆகியோா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்துக்கு வந்தனா். அவா்களுடன் திமுக மாவட்ட செயலா் க.சுந்தா், எம்.பி க.செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளா் சூ.க.ஆதவன், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளா் ஆா்.சாரதி மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிட நவக்குழு துணை அமைப்பாளா் சிவகுமாா் உள்பட பலா் வந்தனா்.

சித்தா்பீடத்தின் சாா்பாக, ஆன்மிக இயக்க செயல் திட்ட அலுவலா் அ.ஆ.அகத்தியன் பொன்னாடை போா்த்தி வரவேற்றாா். பின்னா் மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சித்தா் சிலைக்கும் சிறப்பு வழிபாடுகளை செய்தனா்.