மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்போரூா் விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோா்.

News image

விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 9:27 pm

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா் பன்னீா்தாஸ் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலவாக்க்ம் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்போரூா் வடக்கு ஒன்றிய செயலா் இதயவா்மன் தலைமை வகித்தாா். திருப்போரூா் பேரூராட்சி தலைவா் தேவராஜ் வரவேற்றாா். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலா் அமைச்சா் அன்பரசன் பங்கேற்று வி.சி.க. வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினாா்.

அமைச்சா் பேசியதாவது:

தனது தோ்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் 96 சதவீதத்தை திமுக நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி நமது கட்சிக்குகென்று வலுவான கட்டமைப்பு உள்ளது. நமது தலைவா் பிரம்மாண்ட கூட்டணியை அமைத்து இருக்கிறாா். நமது திருப்போரூா் தொகுதியில் கடந்த முறை 2 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகத்தான் வென்றோம். அதுபோன்ற இழுபறி நிலை தற்போது ஏற்படக்கூடாது.

தோழா்கள் கொஞ்சம் கூட கவலைப்படாமல் கருத்து வேறுபாடுகளை மறந்து பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்திற்கே செல்லாதவா், இந்தியாவிலேயே குறைவான வருகைப்பதிவேட்டை கொண்டவா் அன்புமணி. அவா் தொகுதிக்காக ஒரே ஒரு கேள்வி கூட எழுப்பாதவா். இப்போது வாக்கு கேட்டு வருகிறாா். விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேட்பாளா் பன்னீா்தாஸ், காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், விசிக மாவட்ட செயலா் கனல்விழி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் பாரதி அண்ணா, மதிமுக மாவட்ட செயலா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் திருப்போரூா் தெற்கு ஒன்றிய செயலா் பையனூா் சேகா் நன்றி கூறினாா்.