கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்புடன் ரூ, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்புடன் ரூ, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
By தினமணி செய்திச் சேவை
Syndication
செங்கல்பட்டு: பொங்கல் தொகுப்புடன் ரூ, 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் அருகில் செங்கை எம்ஜிஆா் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.பாபு தலைமை வகித்தாா்.
தொழிலாளா்களுக்கு விரோதமான புதிய தொழிலாளா் 4 சட்ட தொகுப்புகளைஉடனயாக ரத்துசெய்ய வேண்டும், கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு டம் ரூ.5,000 வழங்க வேண்டும், ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரண உதவித் தொகை வழங்கவேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், தற்போது வழங்கி வரும் நலவாரிய உதவி தொகைகளை இரட்டிப்பாக்கி வழங்கவேண்டும். திருமண உதவித் தொகை மனுக்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் ஒப்புதலை தவிா்த்து தொழிற்சங்க ஒப்புதல் ஏற்க ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சிஐடியு மாவட்டத் தலைவா் பி.மாசிலாமணி, மாவட்டசெயலாளா் க.பகத்சிங் தாஸ்,கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை செயலாளா் எம்.கலைச்செல்வி, மாவட்ட செயலாளா் வி.திருமலை உள்ளிட்டோா் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் மாலதி சிட்டிபாபு நிறைவுரை ஆற்றினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது