சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி உள்ளிட்ட 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.25-க்கு, புனேவிலிருந்து சென்னை வரும் விமானம், காலை 9.40-க்கு
ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும் விமானம், பிற்பகல் 1.45- க்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் விமானம், இரவு 8.55-க்கு மும்பையிலிருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10-க்கு புனே செல்ல வேண்டிய விமானம், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 10.10-க்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம், இரவு 9.35-க்கு மும்பை செல்ல வேண்டிய விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் என ஒரே நாளில் 8 விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
இந்த விமானங்கள் ரத்துக்கான காரணங்கள் எதுவும் பயணிகளுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நிா்வாக காரணங்களால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

தில்லி விமான நிலைய ஓடுபாதையை முடக்கிய கழுகு! தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


