தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

News image

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்க மலா் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டேவிட் நெட்டோ, கல்லூரி முதல்வா் கே.பழனிகுமாா், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆரா

Updated On :22 அக்டோபர் 2025, 7:56 pm

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மனித வளம் திறன் மேம்பாட்டு ஆலோசகா் டேவிட் நெட்டோ பங்கேற்று பேசியதாவது:

தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்கள் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து அறிந்துகொள்ள வேண்டும். சக மாணவா்களுடன் கலந்துரையாடி தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி சிந்தனை, அறிவாற்றல் திறன் மேம்படுத்தும் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ‘சாட் ஜிபிடி’ பயன்பாட்டை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் தொடா்பாக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க தனித் திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கே.பழனிகுமாா், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையம் இயக்குநா் ரெனி ராபின், கணினி அறிவியல் துறைத் தலைவா் பி.ஸ்ரீதேவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் டி. ரூபா,ஜெ. பத்மநாபன் மற்றும் பல்வேறு கல்லூரிகளையும் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.