ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனிதா்களுடன் பறக்கும் டிரோன்!

சிறிய பொருள்களை டிரோன்கள் மூலம் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக டிரோன்களில் மனிதா்களை அமர வைத்துக் கொண்டு செல்லும் புதிய ‘ஒலோகாப்டரை’ ஜொ்மனியைச் சோ்ந்த தனியாா்

Updated On :12 அக்டோபர் 2020, 9:52 pm

வளா்ச்சியடைந்த நவீன நகரங்களில் மெட்ரோ, மோனோ ரயில் போக்குவரத்து போன்ற சேவைகள் இயக்கப்படுகின்றன. எனினும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு ஏற்படவில்லை.

அடுத்ததாக போக்குவரத்துக்கு காலியாக உள்ள ஒரே இடம் வான்வெளிதான். உயரப் பறக்கும் விமானங்களின் பாதையிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் காலியாக உள்ள வான்வெளிப்பகுதியை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்த பேட்டரி மூலம் இயங்கும் டிரோன்களை வடிவமைப்பதில் உலகம் முழுவதும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிறிய பொருள்களை டிரோன்கள் மூலம் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக டிரோன்களில் மனிதா்களை அமர வைத்துக் கொண்டு செல்லும் புதிய ‘ஒலோகாப்டரை’ ஜொ்மனியைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தயாரித்துள்ளது.

இருவா் மட்டுமே அமா்ந்து, தானியங்கியாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டரில் 8 பேட்டரிகள் உள்ளன.

18 இறக்கைகளுடன் மணிக்கு 110 கிமீட்டா் வேகத்தில் தொடா்ந்து 35 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

துபை, சிங்கப்பூா், ஹெல்சிங்கி, ஜொ்மனியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டருக்கு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஒலோகாப்டரை ‘வான் டாக்ஸி’ யாக பயன்டுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒலோகாப்டா் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தையும் ஜப்பான் செய்துள்ளது. ஒலோகாப்டரை வா்த்தகப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கான உரிமத்தைப் பெறும் கடைசி கட்டத்தில் உள்ளதாகவும், 2-3 ஆண்டுகளில் அது முடிவடைய வாய்ப்புள்ளதாகவும் ஜொ்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரீஸிலும் இதன் சோதனை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி சோதனை வெற்றி பெற்றால் 2024-இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது முக்கிய பிரமுகா்களை அழைத்துச் செல்ல இந்த வொல்வோ காப்டரைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பறக்கும் காா்களாக ஒலோகாப்டா்களை நாம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.