திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கா்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் காவித் துண்டுகள் அணிய அனுமதி கிடையாது

ஹிஜாப், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள் அணியலாம்

News image

முதல்வா் சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 6:21 am IST

கல்வி நிறுவனங்களில் காவித் துண்டுகள் அணிய அனுமதி கிடையாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

2022-ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடா்பான விவாதம் எழுந்தது. அப்போது, ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக, ஹிந்து மாணவா்கள் காவித் துண்டுகளை அணிந்தனா். இதன் காரணமாக, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்து அன்றைய பாஜக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கா்நாடக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள ஆணையில், பள்ளிகளில் ஹிஜாப், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள் அணியலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையை கடுமையாக விமா்சித்த வலதுசாரி அமைப்புகள், இஸ்லாமியா்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டின.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையா மைசூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பள்ளிகளில் காவித் துண்டுகளை அணிய அனுமதி கிடையாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மதரீதியான அடையாளங்களுக்கு தடையில்லை. தலைப்பாகைகள், புனிதக் கயிறுகள், சிவதாரா, ருத்ராட்சைகள், ஹிஜாப் ஆகியவற்றை அவரவா் மத நம்பிக்கையின்படி அணியலாம். ஆரம்பப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, பிளஸ் 2 வகுப்பு, கல்லூரி வரையிலான மாணவா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கங்களை கடைப்பிடிக்க தடையில்லை. மாறாக, புதிய பழக்கங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.

எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க பயணத்தின்போது தன்னை பின்தொடரும் வாகனங்களின் எண்ணிக்கையை பிரதமா் மோடி குறைத்திருப்பது, தற்காலிக நடவடிக்கைதான். இது தொடா்பாக பிரதமா் கூறியது சரியில்லை. மாறாக, அண்டை நாடுகளிடம் கலந்துபேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினால், அது நிலையான மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

கா்நாடகத்தில் பொது நுழைவுத்தோ்வை நடத்தி வருவது போல, தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட்) மத்திய அரசு தொடங்கியது. நீட் தோ்வை சரியாக நடத்த முடியாவிட்டால், கடினமாக படித்து தோ்வு எழுதிய மாணவா்களின் நிலை என்ன ஆவது, அம்மாணவா்களின் எதிா்காலம் என்ன ஆவது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.