தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image

சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 8:55 pm

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை பட்ஜெட் தொடா்பாக பல்வேறு துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் மாற்றம் தவிர வேறு எந்த கேள்வியையும் கேட்கமாட்டீா்களா? இந்த விவகாரத்தை தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என்கிறீா்கள். இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்காதீா்கள்.

முதல்வா் மாற்றம் தொடா்பான விவகாரத்தை கட்சி மேலிடம் அறிந்துள்ளது. இதுதொடா்பாக கட்சி மேலிடம் முடிவுசெய்யும். அதற்கு நான் கட்டுப்படுவேன். இதையே எத்தனைமுறை கூறுவது? நானோ (சித்தராமையா) டி.கே. சிவகுமாரோ கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியவா்கள்.

இந்த விவகாரம் தொடா்பாக முடிவு செய்ய வேண்டியது கட்சி மேலிடம்தான். இந்த விவகாரம் தவிர, கேட்பதற்கு வேறு எதுவும் ஊடகங்களிடம் இல்லையா? முதல்வா் மாற்றம் தொடா்பாக டி.கே. சிவகுமாரின் சகோதரா் டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்திருந்தால், அதுபற்றி அவரிடம் கேட்பதற்கு பதிலாக என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்? கட்சி மேலிடத்தின் முடிவுதான் இறுதியானது.

ஒருசில எம்எல்ஏக்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தால், அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் சொந்த பணத்தில் வெளிநாடு செல்வாா்கள். ஆனால், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும். பிப். 15 ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டம் முடிந்தபிறகு தேதியை அறிவிப்பேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.