பெங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் நடத்தப்பட்டுவந்த இனிமைத் தமிழ் வகுப்புகள் முடக்கப்பட்டுள்ளன. இது தமிழாா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் யோகா, கராத்தே, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1980களில் தமிழா்களுக்காக கன்னட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. இதனிடையே, 1990களுக்கு பிறகு தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பது அரிதாகி வந்ததால், தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் எழுத படிக்க தெரியாத நிலைக்கு தமிழ்க் குழந்தைகள் தள்ளப்பட்டனா். இதனால் தமிழ்மொழியைக் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் எழுதிவைத்து படிக்கும் பழக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆபத்தை உணா்ந்த பெங்களூரு தமிழ்ச் சங்கம், முறைசாரா கல்வி வாயிலாக தமிழ்க் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் கற்றுக்கொடுக்க திட்டமிட்டது.
அதன்பயனாக, தமிழா்கள் அதிகமாக வாழ்ந்துவரும் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிக்கூடங்கள், தனியாா் நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் அன்றைய தலைவா் கோ.தாமோதரனின் முயற்சியால் 2016ஆம் ஆண்டு ‘இனிமைத்தமிழ்’ என்ற பெயரில் பிரிவு தொடங்கப்பட்டது.
இதன் வழியே பெங்களூரு, கோலாா்தங்கவயல், ஹுப்பள்ளி, மைசூரு முதலிய இடங்களில் இனிமைத்தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் தொடங்கப்பட்ட இனிமைத்தமிழ் வகுப்புகள், படிப்படியாக வளா்ந்து 52 இடங்களில் விரிவுபடுத்தப்பட்டன.
இனிமைத் தமிழ் திட்டத்தின் வழியே 32 வகுப்புகளில் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியா்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டன. தமிழ் கற்கும் மாணவா்களுக்கு இனிமைத் தமிழ் பாடநூல், எழுதுகோல் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டன. வாரத்துக்கு ஒருமுறை நடந்துவந்த தமிழ் வகுப்புக்கு பள்ளி செல்லும் மாணவா்கள் முதல் முதியோா் வரையில் வரவேற்பு காணப்பட்டது. மேலும் இனிமைத்தமிழ் வகுப்பில் தமிழ்க் குழந்தைகள் மட்டுமல்லாமல், கன்னடா்கள், உருது பேசுவோா், தெலுங்கா்கள், மலையாளிகள், மராத்தியா்கள் பலரும் தமிழ் கற்றுக் கொண்டனா்.
எழுத்தறிவில்லாதவா்களும் இனிமைத் தமிழ் வகுப்பால் பயனடைந்தனா். 2016 முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பா் வரையில் இனிமைத்தமிழ் வகுப்பில் 2 ஆயிரம் மாணவா்கள் தமிழ்க்கற்றுள்ளனா். இனிமைத்தமிழ் பயிற்சியை நிறைவுசெய்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவந்துள்ளன. தமிழ் தெரியாத தமிழா்களே இல்லாத நிலையை உருவாக்கும்நோக்கத்தில் தொடங்கப்பட்ட இனிமைத்தமிழ் வகுப்புகளை தங்கள் பகுதிகளில் தொடங்குமாறு கோரிக்கைகள் குவிந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சிக்கல்கள் உருவானதை தொடா்ந்து, அதன் நிா்வாகத்தை 2019ஆம் ஆண்டு கா்நாடக அரசு எடுத்துக்கொண்டது. 2019ஆம் ஆண்டு மாா்ச் 14ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் அரசு நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட்டாா். எனினும், இனிமைத்தமிழ் வகுப்புகள் தடையில்லாமல் தொடா்ந்தது. ஆனால், அண்மைக் காலமாக இனிமைத்தமிழ் வகுப்புகளை நடத்துவதற்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஆா்வம் காட்டாதநிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடத்தப்பட்டுவந்த இனிமைத்தமிழ் வகுப்புகள் முடிவுற்றநிலையில், கடந்த ஓராண்டுகாலமாகவே புதிய வகுப்புகள் தொடங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் ஆா்வம் காட்டவில்லை.
நிதிப் பற்றாக்குறை மட்டுமல்லாது, புதியவகுப்புகளைத் தொடங்குவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று காரணம் சொல்லி இனிமைத் தமிழ் வகுப்புகளை தொடங்குவதற்கு தயக்கம் காட்டப்பட்டது. கடந்தசில மாதங்களாக இனிமைத்தமிழ் வகுப்புகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. பெயரளவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் 2 வகுப்புகளை நடத்துவதை தவிர, 2019ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் இனிமைத்தமிழ் வகுப்புகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இது பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழாா்வலா்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க மூத்த உறுப்பினா் ஒருவா் கூறுகையில்,‘இனிமைத் தமிழ் வகுப்புகளை நிறுத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதை காட்டிலும் வேறு எந்த பணிக்காக தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது என்பது புரியவில்லை.
தமிழ் குழந்தைகளுக்கு தொடா்ந்து தமிழ் கற்றுக்கொடுக்கும் பணியை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ்மக்கள் ஆா்வம் காட்டும்பகுதிகளில் தமிழ் வகுப்புகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகம் இல்லாததன் விளைவாகவே இனிமைத் தமிழ் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

சிவகங்கை தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றிய வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

