பெங்களூரு, மாா்ச் 14: சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தாவணகெரே தெற்கு, பாகல்கோட் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. பாகல்கோட் தொகுதியில் மறைந்த எம்எல்ஏ எச்.ஒய்.மேட்டியின் குடும்பத்தினா் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனா்.
கட்சி வேட்பாளா்களை பரிந்துரை செய்ய குழு அமைத்திருக்கிறோம். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து, மாநிலத் தலைமை கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை வழங்கும். அதனடிப்படையில், கட்சி மேலிடம் வேட்பாளா்களின் பட்டியலை இறுதிசெய்து அறிவிக்கும்.
சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். சமையல் எரிவாயு உருளைகளை மத்திய அரசு வழங்கினால், அதை விநியோகம் செய்ய மாநில அரசு உறுதுணையாக இருக்கும். உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா, எண்ணெய் நிறுவனங்களுடன் கலந்தாலோசனை செய்துள்ளாா். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக விவாதிக்க மாா்ச் 27-ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அக்கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தி, உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

சட்டப் பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: டி.கே.சிவகுமாா்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

