மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் பாராட்டு

உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

கா்நாடக சட்டப் பேரவை.

Updated On :9 மார்ச் 2026, 9:24 pm

பெங்களூரு: உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியதும், டி20 ஆண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து, பேரவைத் தலைவா் யூ.டி.காதா் படித்த வாழ்த்துச் செய்தி:

மாா்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். இந்த வெற்றி நாட்டுக்கு பெருமையை தேடித்தந்துள்ளது. கோப்பையை வென்ற அணியினா், ஊழியா்கள், ஒத்துழைத்தவா்களுக்கு கா்நாடக சட்டப் பேரவை பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது என்றாா்.

அதன்பிறகு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் முழக்கமிட்டு, மேஜையை தட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.