மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இஸ்ரேல் தாக்குதல்: வீடு தீப்பற்றி எரிந்ததில் தாய் பலி! தனியே சிக்கியிருந்த குழந்தை மீட்பு!

இஸ்ரேலிய தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டில் தனியாகச் சிக்கித்தவித்த பாலஸ்தீன குழந்தை மீட்கப்பட்டது குறித்து...

maryam ghanem

இஸ்ரேலின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை மர்யம் கானெம்.. - எக்ஸ்

Updated On :

காஸாவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து 3 வயது பாலஸ்தீன குழந்தை மீட்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், காஸாவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், காஸா நகரத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களைக் குறிவைத்து கடந்த புதன்கிழமை (அக். 14) அதிகாலை இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதான ரீம் அசாத் அவாத் எனும் 33 வயதான பெண் உடல் கருகி பலியாகியுள்ளார்.

இதையடுத்து, அவாதின் உடலைக் கண்டு கதறி அழுத அவரது 3 வயது பெண் குழந்தை மர்யம் கானெம் தனியே தீப்பற்றி எரிந்த அந்த வீட்டுக்குள் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், படுகாயமடைந்திருந்த மர்யமின் சத்தம் கேட்டு மீட்புப் படையினர் அவரை மீட்டுள்ளனர்.

இதில், தீயிக்கு இடையே படுகாயங்களுடன் கதறி அழுதபடி அமர்ந்திருக்கும் மர்யமை மீட்புப் படையினர் மீட்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்கச் செய்துள்ளன.

காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் மர்யம் கானெமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனெவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதலில் மர்யமின் தந்தை அஹமது கானெம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

A video showing the rescue of a 3-year-old Palestinian girl from a burning house, following an Israeli attack on Gaza, is going viral online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.