அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் கட்டி அகற்றம்!

போப் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது பற்றி...

Pope XIV Leo

போப் லியோ - AP

Updated On :

போப் 14-ஆம் லியோவுக்கு வலது நுரையீரலில் புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் 14-ஆம் லியோவுக்கு (71) செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது வலது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இத்தாலி தலைநகா் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போப் லியோ செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 90 நிமிடங்கள் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் அவரது வலது நுரையீரலில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

அறுவைச் சிகிச்சைக்கு பிறகு போப் லியோ நலமுடன் இருப்பதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி அவர் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் அக். 20 வரையிலான அவரின் அனைத்து அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளும், சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பிறகு, போப் லியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையின் போது, புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடம், தனக்கு புற்றுநோய் கட்டி இருப்பதை மருத்துவர்கள் மிக ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதாக போப் லியோ தெரிவித்தார்.

Summary

Lung cancer tumor removed from Pope Leo!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.