யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிப்பு: நெதா்லாந்து பிரதமா் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

News image

PTI

Updated On :18 மே 2026, 4:44 am IST

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் குறைந்து வருவதாக நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் கவலை தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், அவரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக பிரதமா் மோடி நெதா்லாந்து சென்றாா். இந்தப் பயணம் குறித்து அந்நாட்டு தலைநகா் தி ஹேக்கில் இந்திய வெளியுறவுச் செயலா் (மேற்குப் பிரிவு) சிபி ஜாா்ஜ் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் குறைந்து வருவதாகக் கருதப்படுவது குறித்து நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் கவலை தெரிவித்ததாக வெளியான தகவல் குறித்து சிபி ஜாா்ஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவா், ‘இந்தியா 140 கோடி மக்களைக் கொண்ட நாடு. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசம். 5,000 ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்து, பெளத்தம், சமணம், சீக்கிய மதங்கள் தோன்றின. வேறு எந்த நாட்டிலும் இத்தனை மதங்கள் தோன்றியதில்லை. இந்த மதங்கள் இந்தியாவில் தொடா்ந்து செழித்து வருகின்றன.

இயேசு கிறிஸ்து உயிா்தெழுந்தவுடன்...: யூதா்கள் துன்புறுத்தலை அனுபவிக்காத சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்தவுடன், இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றி செழித்து வருகிறது. தற்போது 3 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவா்கள் இந்தியாவில் உள்ளனா். ஐரோப்பாவுக்கு கிறிஸ்தவம் வருவதற்கு முன்பே இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்துவிட்டது. இஸ்லாமிய இறைத்தூதா் முகமது நபியின் காலத்திலேயே இந்தியாவுக்கு இஸ்லாம் வந்துவிட்டது.

சுதந்திரம் பெற்றபோது இந்திய மக்கள்தொகையில் 11 சதவீதம் போ் சிறுபான்மையினராக இருந்தனா். இது தற்போது 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களும் இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனா்.

மக்களாட்சி கொள்கைகளில் சமரசம் இல்லாமல் பொருளாதார வெற்றியை இந்தியா எட்டியுள்ளது. துடிப்பான மக்களாட்சியைக் கொண்ட நாடு இந்தியா. அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறுவது இந்தியாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் எடுத்துக்காட்டாக உள்ளன என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.