எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் எதிரொலியாக உலகளாவிய விமான போக்குவரத்தில் கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரான் மீதான போர் தொடுக்கப்படுவதற்கு முன்பு வரை, இந்த ஓராண்டில்(2026) விமான போக்குவரத்து துறை கணிசமான லாபத்தை ஈட்டியது. 2026-இல் அத்துறைக்கு 4,100 கோடி டாலர் (41 பில்லியன் டாலர்) கிட்டியது.
கரோனா (கோவிட் - 19) பெருந்தொற்று அச்சுறுத்தலுக்குப் பிந்தைய விமான போக்குவரத்தில் ஏற்றம் ஏற்பட்டது. கடந்தாண்டில், கரோனோ பெருந்தொற்றுக்கு முந்தைய நிலவரத்தைவிட 9 சதவீதம் கூடுதல் ஏற்றம் கண்டுள்ளது விமான போக்குவரத்துத்துறை. பயணிகள் வரத்து அதிகரிப்பால் விமான கட்டணம் நிர்ணயித்தல் அணுகுமுறையில் அதிகாரத்துடன் திகழ்ந்து வருகின்றன அத்துறைசார் நிறுவனங்கள்.
இந்நிலையில், இப்போது எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச சமூகத்தில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால், பயணிகள் வருகை குறையலாம் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெட் எரிபொருள் விலை சுமார் இருமடங்கு வரை அதிகரித்தலால், விமான நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளில் மாற்றம் மற்றும் புதிய வியூகங்களை வகுக்க தள்ளாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எரிபொருள் குறைவாக பயன்படுத்தி அதன்மூலம் இயங்கும் நவீன விமானங்கள் அதிக எண்ணிக்கையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுவது விலையேற்றத்தை குறைக்க உதவும். ஆனால், நவீன விமானங்கள் விநியோகம் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது.

உலகளவில் எரிவாயு மற்றும் பிற எரிபொருள் விலை நிலைத்தன்மையற்ற சூழலில் இருப்பதாலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும் பயணிகளின் விமான போக்குவரத்து இயல்புநிலையிலிருந்து குறையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தை நோக்கிய வளர்ச்சியில் வேகத்தடை ஏற்பட்டுள்ளது.
Summary
airlines have begun to hike fares. doubling in jet fuel prices has placed that at risk and forced carriers to rethink their networks and strategies. the industry's ability to remain profitable may depend on whether consumers pull back on flying as gasoline costs threaten household budgets
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விமான எரிபொருள் விலை இருமடங்கு உயர்வு! விமானக் கட்டணம் உயர வாய்ப்பு!!
எரிபொருள் விநியோகம் சீராகிறது! பதுக்கப்பட்ட 15,000 சிலிண்டர்கள் பறிமுதல்! - மத்திய அரசு

பயண கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம்: இண்டிகோ முடிவு
எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

