ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச விதிகளை மீறுதலாகும் என ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர் தெரிவித்தார்.
ஜெர்மனி வெளியுறத்துறை அமைச்சகத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்வில் பேசிய ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர், "இந்தப் போர் பாதிப்பு மிகவும் ஆழமானது. நமது நட்பு நாடுகள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அமெரிக்காவின் அதிகார அரசியல் மீது நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது” என்றார்.
ஈரானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் கண்டிக்காத நிலையில் ஜெர்மன் அதிபரின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், "சர்வதேச சட்ட விதிமீறலை நாம் அவ்வாறே அழைக்காததால் மட்டும் நமது வெளியுறவுக் கொள்கைகள் நம்பகத்தன்மையுடையதாக ஆகிவிடாது.
உண்மையில் இது தவிர்த்திருக்கக்கூடிய போர். மேலும், இது அரசியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்திய தவறு. என்னுடைய பார்வையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சர்வதேச சட்ட விதிகளை மீறிய செயலாகும்.
அமெரிக்கா மீது ஈரான் எப்படியும் உடனடி பதில் தாக்குதல்களை நடத்தியது எனக் கூறி இதனை நியாயப்படுத்துவது வலுவற்றது.
யதார்த்தத்தில், அமெரிக்க நிர்வாகத்துடன் நாம் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் மற்றும் நமது முக்கிய நலன்களில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நமது சொந்தக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
அமெரிக்க அரசிற்கு நம்மைவிட வேறுபட்ட உலகப் பார்வை உள்ளது. அது நிறுவப்பட்ட விதிகள், கூட்டாட்சி, நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை.
நாம் அதை மாற்ற முடியாது. ஆனால், அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Summary
'Breach of international law': German president Steinmeier on US-Israeli war on Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

